
வெள்ளக் காலத்திலும் தேர்தல் பரப்புரை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) வெட்கப்படக்கூடிய சுயநலம் மிக்கவர் என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதிரியான நபரிடம் நாட்டை ஒப்டைத்தால் நாடு குட்டிச் சுவராகும் என்றும் இவருக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டிய வெறி மட்டுமே இருப்பதாக சார்ல்ஸ் சாடினார்.
இவ்வாண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்குதல் கொடுத்து வருவது ஸாஹிட் ஹமிடியின் ஊழல் வழக்கில் இருந்து அவர் தப்பிக்கவே என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், ஆட்சியைக் கலைத்து பொதுத்தேர்தலை நடந்த வேண்டுமென்று அம்னோ பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
