
மலாய் ரீதியான கட்சிகளின் கூட்டணியை வைத்து பாஸ் கட்சி ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அது நிறைவேறினால் நாடு சிதறுண்டு போகும் என லிம் குவான் என எச்சரித்துள்ளார்
பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் இன, சமய விவகாரங்களைக் கிளப்பி, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு உரிமை எதுவும் இல்லையென்று அவர் பேசுவது பல்லின மக்களும் வாழும் நாட்டிற்கு நல்லது இல்லையென்று குவான் எங் குறிப்பிட்டார்.
