
வெளிநாட்டில் மலேசிய மாதர்களுக்குப் பிறக்கும் பிள்ளைக்களுக்கான குடியுரிமைப் பிரச்சினைக்கு அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென Pengerang (பெங்கெராங்) எம்பி Azalina Osman (அஸாலினா ஓஸ்மான்) வலியுறுத்தினார்.
அரசு அது சம்பந்தமான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் தாமே எம்பிக்கள் குழுவோடு சென்று பேரரசரைச் சந்தித்து அது பற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
