
நாட்டில் தற்போது நிலவிவரும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு 22 மாத கால பக்காத்தான் ஆட்சியே காரணம் என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் குற்றம் சாட்டினார்.
பக்காத்தான் ஆட்சியில் வங்காளதேச தொழிலாளர்களின் தருவிப்பை ரத்து செய்து, ஆட்சியில் இருந்து விலகும் வரை அதனைப் புதுப்பிக்காமல் போனதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போது அம்னோ ஆட்சியில், 400,000 அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டுவரும் நடவடிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
பக்காத்தான் ஆட்சியில் நடந்த தவறுகளை மறைத்து தற்போதைய ஆட்சியைக் குறை கூறிவரும் Lim Guan Eng (லிம் குவான் எங்) அதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமென சரவணன் கேட்டுக் கொண்டார்.


