
தனியார் நிறுவன சலவை இயந்திரத்தில் 6 அடி நீள பாம்பைக் கண்ட பயனீட்டாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இச்சம்பவம் சனிக்கிழமை காலையில் 9.41 மணியளவில், ஜொகூர், Taman Impian Emas (தாமான் இம்பியான் இமாஸில்) உள்ள தனியார் சலவை இயந்திரத்தில் நேர்ந்துள்ளது. தகவலை அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 நிமிடத்தில் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து, தூரத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் விட்டனர்.
