34 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

சபாவை மலேசியாவிடமிருந்து கையகப்படுத்த வேண்டும்

சூலு சுல்தான் வாரிசுகள் மலேசியாவின் வெளிநாட்டுச் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அனுமதிக்கப்பட்டால், சபாவை மலேசியாவிடம் இருந்து கையகப்படுத்தும் நடவடிக்கையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அந்நாட்டு செனட்டர் Francis Tolentino (பிரான்சிஸ் டோலெண்டினோ) அறைகூவல் விடுத்துள்ளதை சபா பிகேஆர் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
சபாவில் 750,000 பிலிப்பினோக்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காத மலேசியாவுக்குத் தக்க பாடத்தைக் கற்றுக் கொடுக்க சபாவைப் பெறுவதே அதற்கு சிறந்த வழி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதனைக் கடுமையாகச் சாடிய பிகேஆர் தலைவர்கள், இது அதிகபட்சமான உளறல் என்றும், பிரச்சினையைத் தீர்க்க அகதிகளாக இங்கிருக்கும் எல்லா சபா மக்களையும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
மேலும், எக்காரணத்தைக் கொண்டும் சபாவை பிலிப்பைன்ஸுக்கு தாரை வார்த்துக் கொடுக்க மாட்டோம் என உறுதியாகக் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles