
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பொதுத்தேர்தலை மனதில் கொள்ளாமல் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி அடித்தட்டு மக்களைக் கைதூக்கி விட வேண்டுமென நாட்டின் பிரபல பொருளாதார நிபுணர் டான்ஸ்ரீ கமால் சாலே தெரிவித்தார்.
நாட்டில் கடன் அதிகரிப்பு, மனித மூலதனத்தின் அடைவு நிலை, பண வீக்கம், கோவிட் பெருந் தாக்கத்தினால் பி20 மக்கள் பி40 பிரிவுக்கும் பி40 மக்கள் கீழான நிலைக்கும் தள்ளப்படுள்ளனர்.
மேலும், பொருள், சேவை வரியை(ஜிஎஸ்டி) நீக்கி விற்பனை, சேவை வரியைக்(எஸ்எஸ்டி) கொண்டு வந்ததால் நாட்டின் வருமானம் குறைந்துள்ளதையும் கருத்தில் கொண்டு, ஊழலை ஒழித்து, விரயத்தைத் தடுக்கும் வழிமுறையை பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த வேண்டுமென கமால் சாலே கேட்டுக் கொண்டார்
