
கோம்பாக் தொகுதியில் அன்வார் அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்துப் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அஸ்மின் அலி சவால் விடுத்தார்.
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரும் அனைத்துலக வர்த்தகம், தொழிற்துறை அமைச்சருமான அஸ்மின் அலி, தம்மை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அதற்குப் பின் வாங்காமல் அத்தொகுதியில் வெற்றியை நிலைநாட்டப் போவதாகக் குறிப்பிட்டார்.
பிகேஆர் தமக்கு இழைத்த கெடுதலை எதிர்த்து அங்கு போட்டியிடுவதாகவும் அத்தொகுகுதியில் தாம் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு அத்தொகுதி மக்கள் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்றும் ஷா ஆலமில் பெர்சத்து தேர்தல் இயந்திரத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அஸ்மின் அவ்வாறு தெரிவித்தார்.
