
மலேசிய கடற்படைக்கு 6 போர்க்கப்பல் கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளதாக நம்பப்படுவதால், அதில் சம்பந்தப்பட்டுள்ள இரு இடைத் தரகர் நிறுவனங்களின் குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் தெரிவித்தார்.
Contraves Advanced Devices, Contraves Electrodynamic ஆகிய இரு நிறுவனங்களும் பிரெஞ்சு நேவல் நிறுவனத்திடமிருந்து வெறும் 39. கோடி ரிங்கிட்டுக்கு கப்பலுக்கான உதிரிப் பாகங்களைக் கொள்முதல் செய்து, அதனை கப்பல் கட்டும் நிறுவனமான Boustet Shipyard (போஸ்டெட் ஷிப்யார்ட்) நிறுவனத்திற்கு 118 கோடி ரிங்கிட்டுக்கு விற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பின்னர், தொடர்ந்து, கப்பல் கட்டும் நடவடிக்கை தொடரும் என்றும், முதல் கப்பல் இன்னும் ஈராண்டுகளில் வெள்ளோட்டம் காணும் என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்
