
அலோர் ஸ்டார் அம்னோ தொகுதித் தலைவர் Yusof Ismail (யூசோப் இஸ்மாயிலை) 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்திருப்பதானது, அலோர் ஸ்டார் தொகுதியை மீண்டும் அம்னோ கைப்பற்றுவது சிரமமாக்கும் என அதன் செயலவை உறுப்பினர் Sukri Yacob (சுக்ரி யாக்கோப்) தெரிவித்தார்.
14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோற்ற பின்னர், கெடா அம்னோவினர் துவண்டு போயிருந்த நிலையில், அதற்குப் புத்துயிர் கொடுத்ததே யூசோப் இஸ்மாயில்தான் என்று அவர் தெரிவித்தார்.
இரவு பகல் பார்க்காமல் தொகுதி மக்களுக்குத் தமது சேவையைக் குறைவின்றி செய்திருப்பதாகவும் அதனைக் கருத்தில் கொண்டாவது உச்சமன்றத்தின் தீர்ப்பை தவிர்த்திருக்கலாம்.
மேலும், அவரை இடைநீக்கம் செய்திருப்பதால் அலோர் ஸ்டார் தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் Suka Menanti, Alor Mengkudu ஆகிய இரு தொகுதிகளை அம்னோ மீண்டும் கைப்பற்றுவது மேலும் கடினமாகும் என அவர் தெரிவித்தார்.
