27.9 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

பொதுத்தேர்தலின் தேதியை நிர்ணயிக்க எக்கட்சியிடமிருந்தும் அனுமதி தேவையில்லை

15ஆவது பொதுத்தேர்தலை நடத்தும் தேதியை நிர்ணயிக்க அம்னோ எந்தக் கட்சியிடமிருந்தும் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
அம்னோவின் உச்சமன்றமும் மேல்மட்ட ஐவர் அடங்கிய அணியும் அது பற்றி விவாதித்தது. அதில் கலந்து கொண்ட அம்னோவைப் பிரதிநிதிக்கும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தைக் கலைக்க பேரரசரிடம் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவெடுக்கும் கூட்டத்தில் அம்னோவின் உதவித் தலைவரான பிரதமர் இருந்துள்ளதால், அக்குழு அமைச்சரைவையைப் புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கருதக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம், பாஸ் கட்சியின் செயலாளர் தக்கியுடின் ஹசான், தேர்தல் தேதியை நிர்ணயிக்க அம்னோ தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles