
சிலாங்கூர், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதால் அதனை மேலிடத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் பிகேஆர் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு அத்தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர், அங்கு தமது செல்வாக்கு குறையாது இருப்பதால் அதில் தாம் உறுதியாக வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வழக்கின் காரணமாக அங்கு போட்டியிட முடியாமல் போனதாகவும், இப்போது அந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருப்பதால், அங்கு தாம் போட்டியிட்டால் உறுதியாக வெற்றிபெற முடியும் என்றும் ரபிஸி தெரிவித்தார்.
