
மக்களவையில் கலந்து கொள்ள நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை சிறைத்துறை அனுமதி தர மறுத்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.
இந்நிலையில், நஜிப் மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது தமது அதிகாரத்தில் இல்லை என்றும் அதில் சிறைத் துறையே அதிகாரம் கொண்டிருப்பதாகவும் சபாநாயகர் அஸார் ஹருண் தெரிவித்தார்.
தற்போது நஜிப், எஸ்ஆர்சி வழக்கில் 12 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
