28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோவை தேர்தலில் புறக்கணிக்க ஜசெகவில் சதியா?

15ஆவது பொதுத்தேர்தலில் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சத்தியாகோவை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் Ean Yong Hian Wah (இயான் யோங் ஹியான் வாவை) அங்கு நிறுத்த சதி நடப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் கிள்ளான் தொகுதியில் 2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3 முறை எம்பியாகப் பதவி வகிக்கும் சந்தியாகோ அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகத் குறிப்பிட்டுள்ளார். அத்தொகுதியில் அவர் நிறைவான சேவையை வழங்கி நற்பெயரைச் சம்பாதித்து வருவதால், அவருக்கு அங்கு செல்வாக்கு அதிகமாகவே உள்ளது என்பது கண்கூடு.
இயான் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியின் மேல்மட்டத்தில் இருந்தாலும் அவரின் சேவை
மெச்சும்படி இல்லையென ஜசெகவினர் கூறுகின்றனர். அவர் தலைவர் லிம் குவாங் எங்குடன் நெருக்கமாக இருப்பதுவே அவருக்கான பிளஸ் பாயிண்ட்டாகும்.
ஜசெகவில் இன ரீதியான பாகுபாடு பல காலமாகவே இருந்து வருவதாகவும், தலைமைக்கு ஆமாம் சாமி போடுவோர் மட்டுமே அங்கு பிழைப்பு நடத்தலாம் என்றும் மற்றவர்களுக்கு அக்கட்சியில் இடமில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அது பல்லினங்களையும் கொண்ட கட்சியாக மார் தட்டிக் கொண்டாலும், அங்கும் இனப் பாகுபாடு நிறையவே உண்டு என்று சொல்வோரும் இருக்கின்றனர்.
பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில், இம்மாதிரியான பாகுபாடானது அதன் வெற்றியைப் பாதிக்கும் என்று மலேசியா Malaysia Now (மலேசியா நவ்) எச்சரிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles