
அக்டோபர் 8ஆம் தேதி முதல் போத்தலில் அடைக்கப்பட்ட 5 கிலோ சமையல் எண்ணெயின் விலை ரிம. 31.50க்கும், 3 கிலோ ரிம.19.90க்கும், 2 கிலோ 13.50க்கும், 1 கிலோ எண்ணெய் ரிம. 7.10க்கு விற்கப்படும்.
உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் அமைச்சின் அறிக்கையில் இந்த விலைக் குறைப்பை அறிவித்ததோடு, இந்த விலையானது நவம்பர் 7ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் சமையல் எண்ணெக்கான உதவி நிதியை அரசு மீட்குக் கொள்வதற்கு முன்னர், சமையல் எண்ணெயின் விலை ரிம. 29.70, 18.70, 12.70, 6.70 ஆக விற்கப்பட்டன.
1கிலோ பேக்கெட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கு அரசு ஆண்டுக்கு ரிம. 400 கோடி
ரிங்கிட்டை உதவி நிதியாகச் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
