26.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

விலைவாசி, ரிங்கிட்டின் சரிவை விவாதிக்க வேண்டும்: அன்வாரின் தீர்மானத்தை ஏற்க முடியாது

🔥 Views : 25
👁 Reading Now : 55

தற்போதைய விலைவாசி ஏற்றத்தையும் ரிங்கிட் மதிப்புக் குறைவையும் மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்ற அன்வார் இப்ராஹிமின் தீர்மானத்தை சபாநாயகர் அஸார் ஹருண் தள்ளுபடி செய்தார்.
இந்த இரு விவகாரங்களும் நாட்டையும் மக்களையும் வெகுவாகப் பாதித்திருப்பதால், அதனை அவசரமாக விவாதிக்க அனுமதிக்க
வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார். அத்தீர்மானத்தை அனுமதிக்க வேண்டிய நிபந்தனைகளை அது பூர்த்தி செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த அஸார் ஹருண், இந்த விவகாரம் காலையில் கூட விவாதிக்கப்பட்டதாகவும், பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தாப்பா முகமட் அது பற்றி விரிவான விளக்கத்தை அளித்திருப்பதால் அன்வாரின் தீர்மானத்தைத் தாம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles