30.9 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

அந்நியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு
வழி செய்யுங்கள்

🔥 Views : 20
👁 Reading Now : 45

இங்கு வேலை செய்த பின்னர், விசா முடிந்து சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் பலர் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருவதாக சுஹாகாம் ஆணையர் ரகுநாத் கேசவன் தெரிவித்தார்.
முதலாளிகளிடமிருந்து நிலுவையில் இருக்கும் சம்பளப் பாக்கியை வசூல் செய்ய முடியாமலும், இங்கே தங்கி இருக்க முடியாமலும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமலும் பலர் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அவர்களின் முதலாளிகள் குடிநுழைவு இலாகாவிற்கு அவர்களைப் பற்றிப் புகார் கொடுத்து, அவர்களைக் கைது செய்யவும் வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனவே, அம்மாதிரியான அந்நியத் தொழிலாளர்கள் தங்களது சம்பளப் பாக்கியை
வசூலிக்கும் வரை அல்லது அது சம்பந்தமான தொழிலியல் நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை அவர்களை இங்கேயே இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென ரகுநாத் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles