27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

இரவு விடுதியில் கைகலப்பு கொலையில் முடிந்தது

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட கைகலப்பு ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் மரணமடைந்து இருவர் காயமடைந்ததாக வங்சா மாஜு போலீஸ் தலைவர் Ashari Abdul Samah (அஷாரி அப்துல் சாமா) தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 6 ஆண்களும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மரணமடைந்தவரும் அவரது நண்பர்களும் ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் சண்டையிட்டதாக நம்பப்படுகிறது.
மரணமடைந்ததவரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு, சிகிச்சை பெறும்போது மரணமடைந்துள்ளார். கைது செய்யப்பட்ட 8 பேர் வங்சா மாஜு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles