29 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

8 மாதக் குழந்தையின் முகத்தில் பல்லாள் கடித்த வடு: குழந்தைப் பராமரிப்பாளர் கைது

🔥 Views : 16
👁 Reading Now : 70

தாமான் புத்ரா ஜெயாவில் குழந்தைப் பராமரிப்பாளரின் வீட்டில் விட்டுச் சென்ற 8 மாதக் குழந்தையின் முகத்திலும் காதிலும் பல்லாள் கடித்த வடு காணப்பட்டதை அடுத்து, அக்குழந்தையின் தாயார் (32) சனிக்கிழமையன்று போலீஸில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த 43 வயது குழந்தை பராமரிப்பாளர் அன்று இரவு 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தமது குழந்தையை அழைத்து வரச் சென்ற தாயார் குழந்தைக்கு நேர்ந்த காயத்தைக் கண்டு, அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த பின்னர், போலீஸில் புகார் அளித்தார்.
குழந்தைப் பராமரிப்பாளர், சொந்த காரியத்திற்காக வெளிய சென்றபோது, குழந்தையைத் தமது 8, 16 வயது பிள்ளைகளின் பார்வையில் வீட்டுச் சென்றபோது, அங்கிருந்த மற்ற பிள்ளைகள் அக்குழந்தையைக் காயப்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles