30.9 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

வர்த்தகரைக் கடத்திய இருவர் கைது

🔥 Views : 26
👁 Reading Now : 44

கடந்த வாரம் அம்பாங் ஜெயாவில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தியதாக நம்பப்படும் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
40 வயதுடைய காய்கறி வியாபாரியும் 37 வயது தொழிற்சாலை ஊழியரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் Farouk Eshak (ஃபாரூக் இஷாக்) தெரிவித்தார்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தோயோத்தா வெல்பையர் வாகனமும் இருவரின் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வர்த்தகர் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றபோது, சில மோட்டார் சைக்கிளோட்டிகள் வாகனத்தை விரட்டிச் சென்றனர்.
கடத்தப்பட்ட அதே தினத்தில், வர்த்தகர் கிள்ளானில் விடுவிக்கப்பட்டு, அவர் அம்பாங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles