
கெடாவில் உள்ளூர் கலாச்சாரத்திற்கு முரணான கலை நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளாக மாநில மந்திரி பெசார் Sanusi Md Nor (சனுசி மார் நோர்) அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாலாய் செனி அலோர் ஸ்டாரில் கலை நிகழ்ச்சி ஒன்றில் இளம் வயதினர் வரம்பை மீறி ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளில் அத்து மீறி நடந்ததுள்ள வீடியோ பதிவு வைரலாகப் பரவியதை அடுத்து இந்த
முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும், ஆரோக்கியமான நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள். புதையல் தேடும் போட்டி, மீன் பிடி போட்டிகள் போன்றவை அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.



