25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

மூடாவுடன் பக்காத்தான் ஹரப்பான் அரசியல் ஒத்துழைப்புக்கு இணக்கம்

15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, மூடா கட்சியுடன் அரசியல் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். ஆனால் மூடா , அக்கூட்டணியில் உறுப்பு கட்சியாக இணைவதற்கு ROS சங்கப் பதிவு துறையின் அனுமதி தேவைப்படுமென, அக்கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் , ROS எந்தவொரு விண்ணப்பத்தையும் அங்கீகரிக்காது எனவே தாம் கருதுவதாக அவர் கூறினார். இவ்வேளையில், மூடா கட்சியுடனான ஒத்துழைப்பை அடுத்து, இட ஒதுக்கீடு, சின்னத்தின் பயன்பாடு குறித்து சில விவகாரங்கள் தொடர்பில் முடிவு செய்ய வேண்டியிருப்பதாக , அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles