29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பெக்கானில் போட்டியிடும் வேட்பாளர்களில் நஜிப்பின் பெயரும் உள்ளது

🔥 Views : 7
👁 Reading Now : 36

சிறை தண்டனையை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை, பெக்கான் அம்னோ தொகுதி, அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக பெயரை முன்மொழிந்துள்ளது. அத்தொகுதி அம்னோ துணைத் தலைவர் Zamri Ramly அதனைத் தெரிவித்தார். அத்தொகுதியில் போட்டியிட ஐவரின் பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், நஜிப்பின் இரு பிள்ளைகளின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தேர்வாகும் வேட்பாளர் , பேரரசரின் பொது மன்னிப்பின் கீழ் நஜீப் விடுவிக்கப்பட்டால் , அந்த தொகுதியை அவர் மீண்டும் நஜிப்பிடம் வழங்கி விடுவார் என Zamri Ramly கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles