33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் உரையாற்ற சமூக முன்னாள் மாணவர் தலைவருக்குத் தடை

மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘கருத்துரிமைக்கான சுதந்திரம்’ எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்ற வந்த முன்னாள் மாணவர் Wong Yan Ke (வோங் யான் கெ)யை பல்கலைக்கழக நிர்வாகம் மைக்ரோபோனை அடைத்து, அவரைப் பேச விடாமல் தடுத்தது.
மாணவர் சங்க செயலவையினர் நிர்வாகத்திடம் எவ்வளவோ கெஞ்சியும், வோங்கை பேச நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
2019 அக்டோபர் 14ஆம் தேதியன்று பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக உதவி வேந்தர் Abdul Rahim Hashim (அப்துல் ரஹிம் ஹாஷிம்) இனப் பாகுபாடாக நடந்து கொள்வதால் அவர் பதவி விலக வேண்டுமென வோங் மேடையில் அறைகூவல் விடுத்து, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அவர் மீது குற்றவியல் சட்டத்தின் வழி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles