
15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், ஊழல் வழக்குகளைச் சந்தித்து வரும் அமாட் ஸாஹிட் ஹமிடியே பிரதமராவார் என தாப்பாவில் நடந்த மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும் தேர்தலை இவ்வாண்டே நடத்த வேண்டுமென ஸாஹிட் ஹமிடி வற்புறுத்துவதற்கு இதுதான் காரணம் என்றும், தமது வழக்குகளை ரத்து செய்து, சிறைக்குச் செல்லாமல் இருப்பதற்காகவே இதனை அவர் முழுமூச்சாக செயல்படுத்த முனைவதாக அன்வார் குற்றம் சாட்டினார்.
தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் பிரதமர் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இது பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் என்றும், இஸ்மாயில் மீண்டும் பிரதமராக அம்னோவினர் அனுமதிக்க மாட்டார்கள் என அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
