24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

காரோட்டும் போட்டியில் கார் மரத்தில் மோதி ஓட்டுநர் பலி

🔥 Views : 11
👁 Reading Now : 29

கோல திரெங்கானு, கோங் பாடாக் எனுமிடத்தில் நடந்த The Battle of The King (BOTK) (தெ பேட்டல் ஆஃப் தெ கிங்) எனும் டிரேக் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட ஓட்டுநர், காரை மரத்தில் மோதியதை அடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
பலியானவர் ஓட்டுநர் Apeh Jamal (ஆப்பே ஜமால்) என்று அழைக்கப்படும் Hafez Jamal Jamaludin (ஹாஃபெஸ் ஜமால் ஜமாலுடின்) என்று அப்போட்டியை ஏற்பாடு செய்தோர் தெரிவித்தனர்.
இந்த அசம்பாவிதத்தை அடுத்து, கார் பந்தயம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆப்பே காரைக் கட்டுப்படுத்த முடியாமல், பந்தய தடத்தின் அருகில் இருந்த மரத்தில் மோதி கடுமையான காயத்துக்கு ஆளானதாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles