
15ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆரின் ஆலோசனை மன்றத் தலைவர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டுமென்று மகளிர் அணி கோரிக்கை வைத்ததற்கு அன்வார் இப்ராஹிம், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அஸிஸா 2018இல் போட்டியிட்ட பாண்டான் தொகுதியில் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி போட்டியிடவிருப்பதால், அங்கு அஸிஸா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்வார் மேலும் கூறும்போது, கடந்த பொதுத்தேர்தலில் பெர்சத்து போட்டியிட்ட தொகுதிகளில் அமானா போட்டியிட விரும்புவது என்பது தவறாகாது என்றும் தெரிவித்தார்.
