31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

டத்தோ பா. சகாதேவன் துணைவியார்
டத்தின் பார்வதி அம்மாள் காலமானார்

🔥 Views : 6
👁 Reading Now : 34

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநரும் செயலாளருமான டத்தோ பா. சகாதேவன் அவர்களின் துணைவியார் திருமதி டத்தின் பார்வதி அம்மாள் காலமானார்.

அக்டோபர் 17-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை முன்னிரவு 8:30 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார்.

71 வயதான டத்தின் பார்வதி அம்மாள் அவர்களின் நிறைவு மரியாதை அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 முதல் 3:00 மணி வரை எண் 13 Jalan Tempinis 3, Lucky Garden, Bangsar, Kuala Lumpur என்னும் முகவரியில் உள்ள அவர்தம் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்சுடலைக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் மேல் விவரத்துக்கு விஜய்(017-2432229), சிவா(012-6774391) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

டத்தின் பார்வதி அவர்களின் மறைவையொட்டி, தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு அக்டோபர்-18 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles