
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் அவர்களின் துணைவியார் திருமதி டத்தின் பார்வதி அம்மாள் காலமானதை அறிந்து வருந்துவதாக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 17-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு முன்னேரம் 8:30 மணி அளவில் இயற்கை எய்திய அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் அதேவேளை, மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக தங்க. கணேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
