28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கைதின் போது நான் கடுமையாக நடத்தப்பட்டேன்

🔥 Views : 5
👁 Reading Now : 32

பத்து கேவ்ஸுக்கு அருகில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாக்கு சேகரித்த பத்து தொகுதி துணைத் தலைவர் Rozan Azen Mat Rasip (ரோஸான் ஆஸென் மாட் ராசிப், தமது கைதின்போது போலீசார் தம்மிடம் கடுமையாக நடந்து கொண்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
தாம் கீழே தள்ளப்பட்டு, கைகளைப் பின்னால் வைத்து, கை விலங்கிடப்பட்டதாகவும் அதன் பின்னர் பக்காத்தான் சின்னம் கொண்ட கொடிக் கம்பத்தை உடைத்தெறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தொகுதியில் பல வாக்காளர்களின் முகவரிகள் அனுமதியின்றி மாற்றப்பட்டதை அறிந்து, தாம் அவ்விடத்திற்கு சிறிய கையடக்க ஒளிபெருக்கியோடு சென்று, வாக்காளர்களுக்கு அது பற்றி அறிவிப்பு செய்து, வாக்காளர் பதிவைச் சரி பார்க்கும்படி கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தம்மைக் கைது செய்த காரணத்தை போலீஸாரால் சொல்ல முடியவில்லை என்றும் ரோஸான் தெரிவித்தார்.
பக்காத்தான் ஆட்சியின்போது ரோஸான் துணையமைச்சர் ஒருவரின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles