26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அதிருப்தி இருந்தாலும், தலைமைத்துவ மன்றத்தின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 70

பொதுத்தேர்தலோடு பக்காத்தான் ஆட்சியின் கீழுள்ள மாநிலத் தேர்தல்களையும் நடத்தாமல் அடுத்தாண்டுக்குக் கொண்டுசெல்லும் முடிவு ஏமாற்றம் அளித்தாலும். அது பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்தின் முடிவு என்பதால் அதனை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow (செள கோன் இயா) குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான நிலையை பக்காத்தான் ஆதரவாளர்கள் உணர்ந்து பினாங்கின் தேர்தல் அடுத்தாண்டு நடக்கும்போது தங்களின் வற்றாத ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
எந்நிலையிலும் தேசிய முன்னணி பினாங்கின் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில், பினாங்கின் 13 தொகுதிகளில் 11ஐ பக்காத்தான் வெற்றி கொண்ட வேளையில், அம்னோ இரண்டில் வெற்றி பெற்றது.
ஆயினும், பின்னர், பிகேஆரின் நிபோங் தெபால் எம்பி Mansor Osman (மன்சோர் ஓஸ்மான்) பெர்சத்துவுக்கு மாறிய வேளையில், அம்னோவின் தாசேக் குளுகோர் அம்னோ உறுப்பினர் Shahbudin Yahaya (ஷாபுடின் யாஹயாவும்) பெர்சத்துவுக்குத் தாவினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles