
14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ படுதோல்வி அடைந்த பின்னர், நஜிப் ரசாக் பதவி விலகியதை அடுத்து, அம்னோவை கலைக்கத் தாம் ஸாஹிட் ஹமிடியிடம் கூறியதாக மகாதீர் ஒப்புக் கொண்டார்.
அம்னோ கொண்ட கொள்கையிலிருந்து தடம் மாறி, ஆதரவுக்காகப் பணத்தை வாரி இரைக்கும் நஜிப்பை தற்காக்கவே அதன் தலைவர்கள் முழு மூச்சாக இருந்தனர்.
அம்னோ தலைவர்கள் லஞ்ச ஊழலில் திளைத்து, இனம், சமயம், நாடு, மக்களுக்குப் பாடுபடுவதை விடுத்து, தங்களையும் குடும்பத்தினரையும் வளப்படுத்திக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அம்னோவை கலைக்க வேண்டுமென தாம் கூறியதாக மகாதீர் தெரிவித்தார்.
