
பொதுத்தேர்தலைக் கண்டு அச்சப்படும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தலில் இருந்து ஒதுங்க வேண்டுமென பினாங்கு அம்னோ தலைவர் Musa Sheikh Fadzir (மூசா ஷேய்க் ஃபாஸிர்) கூறியதை பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கடுமையாகச் சாடினார்.
2017ஆம் ஆண்டு பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பினாங்கு மக்கள் பட்ட அவதியை மலேசியர்கள் நன்கு உணர்வர். அம்மாதிரியான நிலைமை தேர்தல் காலத்தில் வந்தால், மக்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவற தேர்தல் அல்ல.
மேலும், நாடாளுமன்றத்தின் தவணைக்கான காலம் அடுத்தாண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைவதால், இவ்வாண்டுக்குள்ளே தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை எதுவுமில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இவைதான் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய பக்காத்தான் கூறும் காரணங்களே தவிர இது வெற்று சாக்குப்போக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
