29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ரெம்பாவ் தொகுதியில் இருந்து விலகுகிறேன்

🔥 Views : 6
👁 Reading Now : 27

வரும் பொதுத்தேர்தலில் ரெம்பாவ் தொகுதியில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடுவதற்கு ஏதுவாக அத்தொகுதியில் இருந்து தாம் விலகுவாதாக சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) அறிவித்தார்.
அதனை அறிவித்த பின்னர், முகமட் ஹசான் அவரைப் பாராட்டியதோடு, இதுவே கட்சியின் குடும்மை ஒற்றுமை என்றும் இதன் மூலம் ரெம்பாவ் தொகுதிக்கான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெம்பாவ் பேராளர் மாநாட்டில் தெரிவித்தார்.
கைரி கட்சியின் வளர்ந்து வரும் இளம் தலைவர் என்றும், அவரின் சேவை கட்சிக்கும் நாட்டுக்கும் தேவை என்பதால், அவருக்கு பொருத்தமான தொகுதி வழங்கப்படும் என முகமட் ஹசான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளை வென்றெடுக்க கடும் முயற்சியில் ஈடுபடும் என்றும் பொதுத்தேர்தலில் குறைந்தது 112 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles