29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பிகேஆருக்கும் அம்னோவுக்கும் ரகசிய உடன்பாடு எதுவும் இல்லை

🔥 Views : 6
👁 Reading Now : 21

பொதுத்தேர்தல் சம்பந்தமாக பிகேஆருக்கும் அம்னோவுக்கும் ஒத்துழைப்பு பற்றிய ரகசிய கலந்தாய்வு எதுவும் நடக்கவில்லை என்று பிகே ஆரின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்.
பிகேஆரும் அம்னோவும் எதிரும் புதிருமாக இருக்கும் வேளையில், அம்னோ தலைவர்கள் ஊழல்களில் சம்பந்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருவதால், பிகேஆர் அதனைக் கடுமையாக விமர்சித்து அது ஆட்சியைப் பிடிக்க தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அம்னோவுடம் சமரசத்திற்கோ அல்லது ஒத்துழைப்பிற்கோ இடமில்லையென்றும் நூருல் திட்டவட்டமாக அறிவித்தார்.
அண்மையில் பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜான்), பிகேஆருக்கும் அம்னோவுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டது, குட்டையைக் குழப்பும் செயல் என நூருல் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles