28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வெள்ளப் பாதிப்பைத் தடுக்க செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தீவிரம்

🔥 Views : 6
👁 Reading Now : 70

கடந்தாண்டு கிள்ளான் வட்டாரத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, கோடிக் கணக்கான சொத்துகள் நாசமானது போல, இவ்வாண்டு நடக்கா வண்ணம் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் புயல் வேக தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
தமது தொகுதியான செந்தோசாவில் ஊராட்சி மன்றத்தின் உதவியின் மூலம் கால்வாய்கள், நீர் தாரைகள், குடியிருப்புக் கழிவு நீர் அகற்றும் சிறு சிறு வடிகால்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் இரவு பகல் பாராமல் நடக்கின்றது.
அதில் பிகேஆர் உறுப்பினர்களோடு பொதுமக்களும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். இந்தப் பொதுப்பணியின் மூலம், இவ்வாண்டு கடும் வெள்ளத்தின் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles