
அரசு சார்பு நிறுவனங்களில் அரசியல்வாதிகளைக் குறைக்க வேண்டுமென்று எல்லா கட்சிகளும் அறைகூவல் விடுக்கும் வேளையில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் 13 மாத பிரதமர் காலத்தில் 234 அரசியல்வாதிகளை அவர் நியமித்துள்ளதாக ஐடியஸ் எனும் என்ஜிஓ குறிப்பிட்டுள்ளது.
இது துன் மகாதீர், நஜிப் ரசாக், முஹிடின் யாசின் காலத்தில் அளிப்பப்பட்ட பதவிகளை விட மிகவும் அதிகமாகும்.
மகாதீர் காலத்தில் 72, முஹிடின் காலத்தில் 139, நஜிப் ரசாக்கின் காலத்தில் 233 அரசியல்வாதிகள் பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அம்னோவின் சார்பில் 113, பாஸ் கட்சியின் சார்பில் 39, பெர்சத்துவின் சார்லில் 18, பார்ட்டி பங்சா மலேசியாவின் சார்பில் 15, மசீசவின் சார்பில் 5 பேரும் அரசு சார்பு நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியைத் தற்காத்துக் கொள்ளவே இந்த அரசியல்வாதிகளின் நியமனம் என்பது வெள்ளிடைமலை.
