31.8 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

பேராபத்தை தவிர்க்கவே, பெர்சத்து கட்சியுடனான ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டது

🔥 Views : 6
👁 Reading Now : 70

மலாய் முல்லீம் சமூகத்தை பிளவுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பெர்சத்து கட்சியை அம்னோ நிராகரிக்கவில்லை. மாறாக, பெரும் தீங்கு ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்யவே, பெர்சத்து உடனான ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாயிட் ஹமிடி தெரிவித்தார்.

பெர்சத்துவை நிராகரித்த அம்னோவின் முடிவால், மலாய் முஸ்லீம் சமூகம் பிளவுப்பட்டிருப்பதாக கூறப்படுவது தொடர்பில் டத்தோ ஸ்ரீ சாயிட் அவ்வாறு கருத்துரைத்தார். மக்களின் ஒருமைப்பாடு அம்னோவின் நீண்ட கால இலக்காகும். அதற்கு, மசீச, மஇகா, PBRS உட்பட தேசிய முன்னணியின் இதர நட்பு கட்சிகளுடன் அம்னோ மேற்கொண்டிருக்கும் ஒத்துழைப்பு தக்க சான்றாகும்.

கடந்த பல ஆண்டுகளாக, நாட்டில் நிலைத்தன்மையையும், வளத்தையும் மேம்படுத்த அம்னோ போராடி வருகிறது. அதனால், எதிரிகளுடன் இணைந்து செயல்பட அம்னோவுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என டத்தோ ஸ்ரீ சாயிட் கேள்வி எழுப்பினார்.

ஆகையால், அம்னோ தலைமைத்துவம், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையிலேயே பெர்சத்து உடனான ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டதாக, அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles