28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சக ஊழியரைக் கொன்ற இந்தியப் பிரஜை
மரண தண்டனையிலிருந்து தப்பினார்

🔥 Views : 8
👁 Reading Now : 54

உணவு ருசியில்லை என்ற காரணத்திற்காக சக ஊழியரான ஆர். தேவதாஸை (60) கொலை செய்த முகமட் ரோஸ்லி கனி (42) என்பவரின் மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் 22 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது.
2017 ஏப்ரல் காலை 11.50 மணியளவில் பகாங், மெந்தாக்காப், சுவான் லெங் ரப்பர் தோட்ட வீடொன்றில் அந்தக் கொலையைப் புரிந்ததாக 2019 அக்டோபர் 22ஆம் தேதி தெமர்லோ உயர்நீதிமன்றம் முகமட் ரோஸ்லிக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளின் மூவர் அடங்கிய அமர்வு, முகமட் ரோஸ்லிக்கு ஆத்திரமூட்டும் வகையில் .தேவதாஸ் நடந்து கொண்டதால், இந்தத் திட்டமிடாத கொலை நடந்துள்ளதாகவும், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 22 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles