
கடந்த மாதம் பாலஸ்தீனரான 31 வயது Omar ZM Albelbaisy Raeda (ஒமார் இஸட் எம் அல்பெல்பைசி ரயிடா)வை 11 உள்ளூர்க் காரர்கள் கோலாலம்பூர் ஜாலான் யாப் குவான் செங்கில் உள்ள பேரங்காடி ஒன்றிலிருந்து கடத்திச் சென்று, கோலாலங்காட் குடில் ஒன்றில் தடுத்து வைத்து, கொடுமைப்படுத்தும்போது போலீசாரால் மீட்கப்பட்டார்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட 11 பேரும் இஸ்ரேல் Mossad (மோசாட்) உளவுப் படையின் கைக் கூலிகள் என்றும் பணத்துக்காக ஒமாரை கடத்தியதாகத் தெரிய வருகிறது. ஆனால், ஆள் மாறட்டம் நடத்து, மோசாட் குறி வைத்த நபருக்குப் பதிலாக ஒமார் தவறுதலாகக் கடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.
மோசாட்டின் உத்தரவின்படி, கடந்தப்பட வேண்டிய நபர், ஒரு கணினி நிபுணர் என்றும் அவர் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹாமாஸுக்கு கைக்கூலியாகச் செயல் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை விதிக்கப்படலாம்.
தனக்கு எதிராகச் செயல்படும், வெளிநாட்டில் இருக்கும் பாலஸ்தீனர்களை ஒழிக்க இஸ்ரேலின் மோசாட் உளவுப் படை அவ்வப்போது இம்மாதிரியான கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வாடிக்கையாகும்.
2018இல் கோலாலம்பூரில் இருந்த Fadi al-Batsh (ஃபாடி அல்-பாட்ஷ்) என்பவரை இரு உள்ளூர் ஏஜெண்டுகளைக் கொண்டு மோசாட் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
