29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

லிம் கிட் சியாங் இஸ்கண்டார் புத்ரியில் போட்டியிட வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 58

அரசியலில் இருந்து விலகப் போவதாக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தாலும், அவர் மீண்டும் இஸ்கண்டார் புத்ரி தொகுதியில் போட்டியிட வேண்டுமென அத்தொகுதியைச் சேர்ந்த 7 ஜசெக தொகுதித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டுக்கும் கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் அவர் செய்த சேவையின் அடிப்படையில், அவரை இத்தொகுதியில் போட்டியிட பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் அனுமதிக்க வேண்டுமென அந்தக் கிளைகள் வலியுறுத்தியுள்ளன.
கிட் சியாங்கிற்கு இத்தொகுதி இல்லையானாலும் வேறு தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் அவரின் சேவை இன்னும் கட்சிக்குத் தேவையென்றும் ஜசெக தலைவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles