26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தாய்லாந்து-மலேசியா எல்லையில் 387 அந்நிய நாட்டவர்கள் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 49

இவ்வாண்டு தாய்லாந்து-மலேசியா எல்லையில் நுழைய முயன்ற ஆவணமில்லாத அந்நியர்கள் 387 பேர் கைது செய்யப்பட்டதாக பெர்லிஸ் போலீஸ் தலைவர் Surina Saad (சுரினா சாட்) தெரிவித்துள்ளார்.
அதில் 320 மியன்மாரிகள், 67 தாய்லாந்துக்காரர்கள் அடங்குவர் என்றும் இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார். கடந்தாண்டு 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் நுழைவோர் வேலை தேடியும் மலேசியாவில் அமைதியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இங்கு வர முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.
வாங் கிளியான் சம்பவத்தை அடுத்து எல்லையில் பொருள் கடத்தல், ஆள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles