24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அடைக்கலம் நாடி வந்த மியன்மாரிகளை மலேசியா திருப்பி அனுப்புகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 51

மியன்மாரில் ராணுவ ஆட்சியின் எதிர்ப்பாளர் களின் மீது அராஜக நடவடிக்கையை ஏவி கொடுமைப் படுத்துவதை மலேசியா கடுமையாகக் கண்டித்து வந்தாலும், இங்கு அடைக்கலம் நாடி வரும் மியன்மார் நாட்டவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்களைச் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வருவதாக சமுக அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இம்மாதம் மட்டும் அந்நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் உட்பட 150 மியன்மாரிகளை மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. அவர்கள் சொந்த நாட்டுக்குச் சென்றவுடன் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்படும் அச்சம் இருந்தாலும், மலேசியா மனிதாபிமானமில்லாமல் அவர்களைத் திருப்பி அனுப்புவது அராஜகம் என வர்ணிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 6 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Kyaw Hla (கியாவ் ஹ்லா) என்பவரும் அவரது மனைவி Htay Htay Yee (ஹிதாய் ஹிதாய் யீ) ஆகியோர் அந்நாட்டிற்குச் சென்றடைந்தவுடன் யாங்கூனில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதன் காரணம் சொல்லப்படவில்லை.
இது சம்பந்தமாக ஐநா அகதிகளுக்கான ஆணையமும் மலேசிய குடிநுழைவுத் துறையும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles