34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தொழில் முனைவர் ஞானராஜாவின் மீதான 19 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை

பினாங்கு கடலடி சுரங்கப் பாதை குத்தகைத் திட்டத்தில் நடந்த ஊழல் நடவடிக்கையின் மீது எம்ஏசிசி விசாரணை நடத்தாமல் தடுக்க 19 மில்லியன் ரிங்கிட்டை பெற்று அதனை மோசடி செய்ததாக தொழில் முனைவர் ஜி. ஞானராஜா மீது விசாரணை நடத்தப்பட்டது.
குத்தகை நிறுவனமான ஸெனித் கட்டுமானத் திட்ட இயக்குநர் ஸாருல் அமாட் முகமட் சுல்கிப்லி அந்தப் புகாரை அளித்த பின்னர், எம் ஏசிசி அந்த வழக்கின் மீது மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாமென முடிவெடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜி.ஞானராஜா அந்தப் பணத்தை எம் ஏசிசிக்கு தருவதாகப் பெற்று, மோசடி செய்தததாக அப்போது பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று சுரங்கப்பாதைத் திட்டத்தில் லிம் குவான் எங்கின் மீதான வழக்கின் விசாரணையில் சாட்சியமளித்த அரசு துணை வழக்கறிஞர் Mahadi Abdl Jumat (மஹாடி அப்துல் ஜுமாட்) ஜானராஜாவின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்ற முடிவெடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆக, எம்ஏசிசியின் இந்த நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தப் பணம் எம்ஏச்சிக்கு கைமாறியதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles