28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

25,000 ரிங்கிட் கையூட்டு வாங்கிய செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிக்கு 6 மாதச் சிறை

கோலகுபு பாரு செஷன்ஸ் நிதிமன்ற முன்னாள் நீதிபதி Azmil Muntapha Abas (அஸ்மில் முஸ்தாப்பா அபாஸுக்கு) (48) ஊழல் வழக்கில் 6 மாதச் சிறைத் தண்டனையும் 25,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
2018 மே 10ஆம் தேதி 6 அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் சுதாட்ட குற்ற வழக்கில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்காமல், வெறும் அபராதத்தை மட்டுமே விதித்து, அதற்காகக் கையூட்டு வாங்கிய அஸ்மில் முஸ்தாப்பா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி Rasyihah Ghazali (ரஸிஹா கஸாலி) அஸ்மிலுக்கு 6 மாதச் சிறையும் 25,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக 6 மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles