31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நீதிபதி நஸ்லான் மீதான விசாரணையின்
சட்டத் தெளிவு நவம்பர் 10இல் தெரியும்

🔥 Views : 6
👁 Reading Now : 47

எஸ்ஆர்சி வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிறையில் அடைத்த நீதிபதி நஸ்லான் கஸாலியின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை நடத்த முடியுமா என்ற முடிவை வரும் நவம்பர் 10ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் முடிவை அறிவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவையில் உள்ள நீதிபதியின் மீது விசாரணை நடத்த முடியுமா, சேவையில் இருக்கும் நிதிபதியின் மீது விசாரணை நடத்த உத்தரவிட பொது வழக்காடு மன்றத் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் Nur Ain Mustaffa (நுர் ஐன் முஸ்தாப்பா). Srikanth Pillay (ஸ்ரீகாந்த் பிள்ளை), சமூக ஆர்வலர் Haris Dathilah Ibrahim) ஹாரிஸ் பாத்திலா முகமட் இப்ராஹிம் ஆகியோர் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு சொல்ல கூட்டரசு நீதிமன்றமே தகுதியான தளம் என ஜுலை 19ஆம் தேதி நீதிமன்ற பதிவதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles