
பொதுத்தேர்தல் பரப்புரைக்கு 21 நாள்களுக்குப் பதிலாக வெறும் 14 நாள் மட்டும் தரப்பட்டுள்ளது அதிருப்தியை அளித்திருப்பதாக பெர்சே அமைப்பு தெரிவித்துள்ளது.
14 நாள்கள் என்பது மிகவும் குறைவானது என்றும் அது 21 நாள்களாக இருந்தால், போட்டியிடும் கட்சிகள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு தேட வாய்ப்பாக இருப்பதோடு வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் அஞ்சல் வாக்குகளை அனுப்பவும் முடியும்.
அஞ்சல் மூலமாக வாக்குகளை அனுப்ப இறுதித் தேதியை இன்னும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டுமென்றும் பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது.
