24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சாலை அடைக்கப்பட்டதால், கிள்ளான் லிட்டல் இந்தியாவின் வர்த்தகம் பாதிப்பு

கிள்ளான் லிட்டல் இந்தியாவின் ஜாலான் தெங்கு கிளானா சாலை அக்டோபர் 20லிருந்து 22ஆம் தேதி வரை அடைக்கப்பட்டதால், வழக்கமாக நடைபெறும் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டு, பெருத்த நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அப்பகுதிக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் ராஜா மூடா தெங்கு அமிர் ஷாவும் தீபாவளியை முன்னிட்டு வருகை தருவதால் அந்தச் சாலை அடைக்கப்பட்டது.
யாருடனும் கலந்து பேசாமல் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவின் ஏற்பாட்டில் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக லிட்டல் இந்தியா வர்த்தகச் சங்கத் தலைவர் சார்ல்ஸ் மாணிக்கம் தெரிவித்தார்.
சாலையின் நடுவே பெரிய மேடை அமைக்கப்பட்டதால் பயனீட்டாளர்கள் கடைகளுக்குச் செல்ல முடியாமலும் கார்களை நிறுத்த முடியாமலும் அவதிப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கிள்ளான் தொகுதியில் கணபதிராவ் போட்டியிடும் ஆரூடம் வலுத்து வருவதாகவும், மந்திரி பெசாரின் வருகை அதனையொட்டியே ஏற்பாடு செய்யப் பட்டதாகவும் தெரியவருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles