25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சரிவுக்கு வழி தேடுகிறதா ஜசெக?

🔥 Views : 6
👁 Reading Now : 49

ஒரு காலத்தில் பல்லினங்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக விளங்கிய ஜசெக வரும் பொதுத்தேர்தலில் சரிவைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
15ஆவது பொதுத்தேர்தலில் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு தொகுதி கொடுக்காமல் அலைக்கழித்திருப்பது பெரும் விமர்சனத்துக்கு அது உள்ளாகி இருக்கிறது.
அத்தொகுதியில் 3 தவணைகளாக இருக்கும் சார்ல்ஸ் கடுமையான உழைப்பாளி. மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் என்றும் கோவிட், வெள்ளக் காலத்திலும் ஓடி ஆடி உழைத்தவர். அவருக்குத் தொகுதி இல்லையென்று ஜசெக அறிவித்துள்ளது பெரும் சரிவுக்கு வழி வகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அவர் கட்சிக்குக் கட்டுப்படாமல் தனியாளாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பத்து காவன் எம்பியான கஸ்தூரி பட்டு, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமக்குத் தொகுதி கொடுக்கப்படாது என்ற காரணத்தை முன் கூட்டியே அறிந்து கொண்ட அவர், போட்டியிடாமல் ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கட்சியில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இனப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது தொடர்ந்தால் ஜசெக அழிவைச் சந்திக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles