28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அமிருடின் ஷாரி அஸ்மின் அலியை எதிர்த்து கோம்பாக்கில் போட்டி?

🔥 Views : 6
👁 Reading Now : 39

பொதுதேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் தமது நண்பரான அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.
கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும்போது, அமிருடின் ஷாரி 2008இல் இருந்து சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பின்னர் மந்திரி பெசாராகவும் பதவி வகுத்து, சிறப்பாகச் சேவையாற்றி இருப்பதால் எம்பியாக வர அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.
கோம்பாக் தொகுதி வாக்காளர்கள் பக்காத்தானுக்கு விசுவாசமானவர்கள் என்பதால் அமிருடின் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தாம் கோம்பாக் தொகுதியைத் தற்காக்கப் போவதாக அஸ்மின் அலி கூறியுள்ளார். 2018 பொதுத்தேர்தலில் அவர் 48,721 வாக்குப் பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles